24/04/2025
#Devotional #Devotional Tamil

Billy Graham’s Second Chance – பில்லி கிரகாமின் இரண்டாவது வாய்ப்பு

 

பில்லி கிரஹாம்  ஐய்யா இயேசுவை ஏற்று கொண்ட பிறகு, 
ஒரு நாள் பயங்கர பிரச்சனையாம் வாழ்க்கையில்.என்ன செய்வதென்றே தெரியவில்லையாம்.  எனவே அவர் கோவம் தாங்காமல், விரக்தியில் சிகிரெட் பிடிக்க நினைத்து கையில் எடுத்து கொண்டு, கிளப்பின்  ஒரு இடத்தில் புகை பிடிக்க அமர்ந்து கொண்டார்.. 
 அப்பொழுது எங்கோ இருந்து வந்த ஒரு ஃபுட்பால்,  ஜன்னலில் வழியாக வந்து சரியாக அவருடைய சிக்ரெட் உள்ள கையில் பட்டு சிக்ரெடை தட்டி விட சிகரெட் கீழே  விழுந்து விட்டதாம்.பிடிக்க விடாமல் தடுத்தது போல.
அதை சற்றும் இதை எதிர் பார்க்காத கிரஹாம். பிறகு மனதில் குத்தப்பட்டவராய் எழுந்து நேரே ஓடி புட்பால் மைதானத்தில் நடுவில் கீழே உட்கார்ந்து ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டாராம். எவ்வளவு மணி நேரம் அழுதாரென்று அவருக்கே தெரியவில்லையாம். இது எப்போது !?  இயேசுவை ஏற்று கொண்ட பிறகு. யார்? 
பில்லி கிரஹாம். ஆனால்  அதன் பிறகு கர்த்தர் பல லட்சங்களுக்கு தேவன்  அவரை ஒரு முன் மாதிரியாக வைத்தார். பாவம் செய்வது விழுவது எல்லார் வாழ்விலும் நடக்கும். நாமும் கூட சில நேரங்களில் செய்ய கூடாது என நினைக்கும் பாவங்கள், பார்க்க கூடாது என நினைப்பவை, பேசக்கூடாத நபர்களிடம் பேசுவது,   என இது போன்ற காரியங்களை செய்து விட்டு பிறகு,  குற்ற உணர்ச்சியில் உறைந்து போய் விடுகிறோம். விழுவது, எழுவது. மீண்டும் விழுவது மீண்டும் அழுது ஒப்பு கொடுப்பது. பின் மீண்டும் மீண்டும் செய்வது. உண்மைதானே !கவலை படவேண்டாம். விழுந்து போனவர்களை  அப்படியே விட்டு விட்டு போகாமல், தூக்கி நிறுத்தி புது வாழ்வை கொடுக்க தேவன் வல்லவர். இன்றும் அவர் தூக்கி விட்டு மறுவாழ்வு தர ஆயத்தமாக உள்ளார். நாம் வாழும் இந்த பூமியில் இங்கு யாரும் பரிசுத்த வான்கள் கிடையாது. தன்னிடம் யாரும் பாவமே இல்லை என கூறவும் முடியாது. யாராவது நம்மை பாவி என்று ஏளனம் செய்தாலோ,  இல்லை அசிங்க படுத்தினாலோ  அவர்களிடம் தைரியமாக கூறுங்கள். ஆம் நான் பாவித்தான். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் பாவத்தை கழுவியது.இப்பொழுது நான் கர்த்தருடைய பிள்ளை என்று. எல்லாரும் பரிசுத்த வாழ்க்கை வாழவும், கர்த்தர் காண்பித்த பாதையில் செல்ல ஒரு ஒரு நாளும் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு முயற்சி செய்து கொண்டுதான் உள்ளோம். 
பாவமே செய்யாதவர்களை விட, அந்த பாவத்தின் வழியாய் கடந்து விழுந்து மீண்டு எழுந்து கர்த்தாரிடமாய்  வந்தவர்கள் தான் சரியான ஒரு தீர்வை கூற முடியும் என்பது அழுத்தமான உண்மை. . நாமே முன் மாதிரி. ஒரு ஒரு நாளும் நம்மில் மாம்சம் சாகவும், கிறிஸ்து வாழவும்  வேண்டும்.



Sis. Meena Juliet


Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Billy Graham’s Second Chance – பில்லி கிரகாமின் இரண்டாவது வாய்ப்பு.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *