25/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Vazhi Thirakkume – வழி திறக்குமே

வழி திறக்குமே புது வழி திறக்குமே
இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே – 2
வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே
மகிமையின் இராஜா வந்திடுவாரே
முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே
புதிய காரியம் செய்திடுவாரே
1. அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே
சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே
எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே
சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே – 2
எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா – 2
2. யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே
எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே
பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே
வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே – 2
புது வழி நமக்காக திறந்திடுவாரே – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா – 2
3. கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால்
சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே
இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும்
தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே
தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால் – 2
வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2-வழி
Tanglish
Vazhi Thirakkumae Puthu Vazhi Thirakkumae
Yesuvin Namathil Vazhi Thirakkumae – 2
Vaasalgal Ellam Thalai Uyarthidungalen
Magimayin Raaja Vanthiduvaarae
Munthinathellam Ini Ninaikka Vendaamae
Puthiya Kaariyam Seithiduvaarae

1. Aseeriyan Karvangal Thaazhthappadumae
Sarppathin Thalaigal Ellam Udaikkappadumae
Egipthin Kodungolkal Murikkappadumae
Samuthira Aazhangal Vatri Pogumae – 2
Egipthin Ninthaigal Ellam Neekkiduvaarae – 2

Hallelujah Hallelujah Hallelujah
Enga Allal Ellam Neekiduvaar Hallelujah – 2

2. Yorthan Pinnittu Thirumbi Pogumae
Eriko Munbathaaga Norungi Vizhumae
Parvathangal Malaigal Ellam Gemberrikkumae
Veliyin Marangal Ellam Kai Kottumae – 2
Puthu Vazhi Namakkaga Thiranthiduvaarae – 2

Hallelujah Hallelujah Hallelujah
Enga Allal Ellam Neekiduvaar Hallelujah – 2

3. Kartharin Magimayaana Prasannathaal
Sathurukkal Mutrilumaai Norungi Povaarae
Iravil Akkini Sthambam Mega Sthambamum
Thamathu Janathin Munne Kadanthu Selvaare
Thamathu Janathin Melae Piriyam Vaithathaal – 2
Vakkuththatha Desathukku Kondu Selvaarae – 2

Hallelujah Hallelujah Hallelujah
Enga Allal Ellam Neekiduvaar Hallelujah – 2
                                   – Vazhi


Song Description: Tamil Christian Song Lyrics, Vazhi Thirakkume, வழி திறக்குமே.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Vazhi Thirakkumae, Christian Song Lyrics.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *