24/04/2025
#Lyrics #Steven Samuel D #Tamil Lyrics

Parisuthar Parisuthare – பரிசுத்தர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தரே
மகிமையில் வசிப்பவரே – 2
ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன்
நித்தியப் பிதா சமாதானத்தின் பிரபு – 2
கர்த்தர்த்துவம் தம் தோளில் உள்ளதால்
சர்வ வல்லமைக்கும் ஆளுமைக்கும் மேலானவர் – 2

இயேசு நாமம் இயேசு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
எல்லா நாவும் பாடி பாடி போற்றும் நாமம் – 2

பூமியின் குடிகளே தேவனைத் துதித்திடுங்கள்
தேவ தூதர் சேனைகளும் தேவனைத் துதித்திடுங்கள் – 2
சூரிய சந்திரனும் நட்சத்திரங்கள் கூட்டங்களும்
தேவனைத் துதித்திடுங்கள் – 2
– இயேசு நாமம்

பாலகர்கள் முதியோர்களும் தேவனைத் துதித்திடுங்கள்
வாலிபர்கர்கள் கன்னியர்களே தேவனைத் துதித்திடுங்கள்
வானாதி வானங்களும் பூமியில் உள்ளவைகளே – 2
தேவனைத் துதித்திடுங்கள் – 2
– இயேசு நாமம்

எக்காள சத்தத்தோடும் தேவனைத் துதித்திடுங்கள்
தம்புரோடும் நடனத்தோடும் தேவனைத் துதித்திடுங்கள் – 2
பேரோசையுள்ள கைத்தாள மேளத்தோடும்
தேவனைத் துதித்திடுங்கள்
– இயேசு நாமம்

Songs Description: Tamil Christian Song Lyrics, Parisuthar Parisuthare, பரிசுத்தர் பரிசுத்தரே.
KeyWords: Steven Samuel Devassy, Tamil Song Lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *