24/04/2025
#Lyrics #Tamil Lyrics

Neer Ennai Vittu – நீர் என்னை விட்டு


நீர் என்னை விட்டு போனால் 
என் வாழ்வு  என்னாகும்  
நீர் என்னை விட்டு பிரிந்தால் 
என் வாழ்வு  என்னாகும்  

தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் 
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே 

புல்லைப்போலே மறைந்து போகும் 
மனிதனுக்காய் வர்ணணையாய்
கவிதை எழுதுகிறான் 
வருஷம்  தோறும்  உன்னை 
வழி நடத்தும்  தேவன் 
வருடாமலே உன்னை நடத்திடுவார்
                  – தனியே நான்

கண்ணீராலே என் கண்கள் 
கலங்கி போனாலும் 
கண்ணீரெல்லாம்  கணக்கில் வைத்துள்ளீர் 
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்
துணையாளரே உம்மை துதித்திடுவேன்
                  – தனியே நான்

வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும்  
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்  
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும் 
சேனைகளின்  தேவனே  ஸ்தோத்தரிப்பேன்  
             – நீர் என்னை

நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ  வேண்டும் 
நீர் போதும்  என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே   
நீர் என்னை விட்டு போனால்


Song Description: Neer Ennai Vittu, நீர் என்னை விட்டு.
Keywords: Samson Lazar, Neer Ennai Vittu Ponal, Ragathalaivaney.

Uploaded By: Samson Lazer


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *