24/04/2025
#Benny Joshua #Lyrics #Tamil Lyrics

Naan Emmathiram – நான் எம்மாத்திரம்


இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம்
என் வாழ்க்கை எம்மாத்திரம்
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
நான் எம்மாத்திரம்
என் குடும்பம் எம்மாத்திரம்

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு – 2

ஏன் என்னை தெரிந்து
கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2

என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன்
புரிந்து கொண்டேன் – 2
தற்கால தேவைக்காய்
உம்மை நோக்கி பார்த்தேன்
தலைமுறை தாங்கும
(தாங்கிடும்) திட்டம் தந்தீர் – 2


Song Descripttion: Tamil Christian Song Lyrics, Naan Emmathiram, நான் எம்மாத்திரம்.
Keywords: Benny Joshuah, Tamil Worship Song, Nan Emmathiram, Naan Emmatthiram.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *