24/04/2025
#Tamil Lyrics

Belanae Kanmalayae – பெலனே கன்மலையே

உதவியற்ற மாந்தருக்கு
உதவி செய்யும் கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
பெலவீனரை பெலவான்களாய்
மாற்றுகின்ற கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் – 2

பெலனே கன்மலையே
உம்மை நான் ஸ்தோத்தரிக்கின்றேன் -2

1. தள்ளப்பட்ட கல்லை தலைக்கல்லாகவே மாற்றுகிறீர்
குப்பையிலிருந்து தூக்கி கன்மலைமேல் உயர்த்துகிறீர் – 2
உந்தன் கிரியைகள் ஆச்சரியமானவை
அற்புத தேவனே உம்மை – ஸ்தோத்தரிக்கின்றேன் – 2
– பெலனே.

2. நம்பிவந்தோர் எவரையுமே
புறம்பே தள்ளாதவரே
தாங்கியே ஆதரிப்பீர்
அரவணைக்கும் கரங்களினால் – 2
அன்பின் சிகரமே அநாதி தேவனே
அதிசயமானவரே ஸ்தோத்தரிக்கின்றேன் -2
– பெலனே

3. உம்மையே நோக்கிப் பார்த்தோர்
வெட்கப்பட்டுப் போனதில்லை
அவர்கள் முகங்களை
பிரகாசிக்கச் செய்கின்றீர் – 2
பெலவீனனும்சொல்வான்
தான் பெலவான் உம் பெலத்தால்
எங்கள் பெலனே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் – 2
– பெலனே

…..

Uthaviyatra Maantharukku
Uthavi Seyyum Karthavae
Ummai Shthotharikintren
Belaveenarai Belavaankalai
Matrukintra Karthavae
Ummai ShthotharikintrenBelanae Kanmalaiye
Ummai Naan Shthotharikintren – 2

1.Thallapatta Kallai Thalaikallahavae Matrukireer
Kuppaiyilirunthu Thooki Kanmalaimel Uyarthukireer – 2
Unthan Kiriyaikal Achariyamaanavai
Arputha Devanae Ummai Shthotharikintren – 2
– Belanae

2. Nambi Vanthor Evaraiyumae
Purambae Thallathavare Thangiyae Aatharipeer
Aravanaikkum Karankalinal -2
Anbin Sikarame Ananthi Devanae
Athisayamanavare Shthotharikintren – 2
– Belanae

3. Ummaiyae Nokkip Parthor Vetkappattu Ponathillai
Avarhal Muhangalai Prahasikka Cheihinteer – 2
Belaveenanum Solvaan Thaan Belavaan Um Belatthal
Engal Belanae Ummai Shthotharikintren – 2
– Belanae

 

Song Description: Belanae Kanmalayae, பெலனே கன்மலையே.
Keywords: Tamil Christian Song Lyrics, Solomon Robert, Justin Timothy.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *